Show all

அதனாலா இழுபறி! சிறியகட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் பெற்றுவிடும்; தொடர்ந்தும் வளரும்: உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால்

உள்ளாட்சித் தேர்தல் இழுபறி- மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ நிருவாகச் சிக்கல் போலத் தெரியும். ஆனால் உண்மை: “பாகுபாட்டு வாதம், பார்ப்பனிய ஆதிக்கவாதம்” என்கிற தத்துவத்தின் ஆட்சியின் அலங்கோலங்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உள்ளாட்சித் தேர்தல் இழுபறி- மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ நிருவாகச் சிக்கல் போலத் தெரியும். ஆனால் உண்மை: “பாகுபாட்டு வாதம், பார்ப்பனிய ஆதிக்கவாதம்” என்கிற தத்துவத்தின் ஆட்சியின் அலங்கோலங்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

“பாகுபாட்டு வாதம், பார்ப்பனிய ஆதிக்கவாதம்” என்கிற இந்தத் தத்துவம், பிரித்தானிய இந்தியாவிற்கு முந்தைய இந்தியாவில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக, எழுதப்படாத சட்டமாகவும், நடைமுறையாகவும் இருந்தது. ‘இந்தச்சாதியை விட இந்தச்சாதி உயர்ந்தது, அந்தச்சாதியை விட அந்தச்சாதி உயர்ந்தது, இந்தக்குழுவை விட இந்தக்குழு உயர்ந்தது, அந்தக்குழுவை விட அந்தக்குழு  உயர்ந்தது. எல்லா சாதிகளைவிடவும், எல்லா குழுக்களைவிடவும் பார்பபனர்கள் உயர்ந்தவர்கள்’ என்பதுதான் “பாகுபாட்டு வாதம், பார்ப்பனிய ஆதிக்கவாதம்” என்கிற தத்துவத்தின் விளக்கமாகும். இந்தத் தத்துவ ஆட்சியால் இந்தியா முழுவதும் எந்த மன்னர் ஆட்சி நடந்த போதும், சாதியச் சண்டைகள், வன்முறைகள், தீயூட்டல்கள் தொடர்ந்து நடந்;து கொண்டிருந்தன. பார்ப்பனர்கள் எல்லா சாதிகளைவிடவும், எல்லாக் குழுக்களைவிடவும் உயர்ந்தவர்கள் என்ற விதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு சண்டையில், வன்முறையில், தீயூட்டலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அவர்கள் எல்லோரும் உயர்ந்தவர்களாக பாதுகாப்பு இடத்தில் வைக்கப்படுவர்.

பிரித்தானிய இந்தியாவில், இந்தத் தத்துவத்தின் மீது கேள்வி எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அந்தக் கேள்வியினால் திராவிட இயக்கங்கள் சிறப்பாக வளர்ந்தன. தமிழக மக்களிடம் இந்த தத்துவத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்பும் தொடர்ந்து அந்த வெறுப்பு தமிழக மக்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை ஆளும் பாஜகவினருக்கு தமிழக மக்கள் மீது இதனால்தான் வெறுப்பு. ஆனால்- பாஜக இந்தியாவில் ஆட்சியில் இருப்பதால், தமிழக அரசியல்வாதிகள் அப்படியும், இப்படியுமாக அல்லாட்டத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் சிறிய சிறய கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் “பாகுபாட்டு வாதம், பார்ப்பனிய ஆதிக்கவாதம்” என்கிற தத்துவத்தின் மீதான தமிழ்மக்களின் வெறுப்பை கொண்டாடி வருகின்றன. தொடக்கத்தில் திராவிட இயக்கங்கள் சிறப்பாக வளர்ந்த பாணியை தங்கள் முன்னெடுத்து வருகின்றன.

வடஇந்தியாவில், பிரித்தானிய இந்தியாவிலும் இந்தத் தத்துவத்தின் மீது எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் இந்தத் தத்துவம் அதிகாரிகள் மட்டத்தில் ஆட்சி செய்து வந்தது. தற்போது பாஜக ஆட்சியில், இந்த கட்சியின் அடிப்படை கொள்கையாக இந்தத் தத்துவம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 

இதுதான் தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் இழுபறிக்கு அடிநாதமாக இருந்து வருகிறது. பாஜக- அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுகவும், நாம்தமிழர் போன்ற கட்சிகளும்; உள்ளாட்சியில் அங்கீகாரம் பெற்று வளர்ந்து விடக் கூடாதே என்பதே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கான தொடர் காரணங்களாகும்- பாஜக தயவால் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிற அதிமுகவால்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வட்டார மறுவரையறையை முழுமையாக முடிக்க உத்தரவிடக் கோரி திமுக மற்றும் செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

திமுக சார்பில் அணியமான அபிஷேக் மனு சிங்வி, வட்டார மறுவரையறை பணிகள் முடிவடையாமல், தேர்தல் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மாவட்டங்களுக்கான வட்டார மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை என்றும் தெரிவித்தார்.  அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் நரசிம்மா, வட்டார மறுவரையறை பணி முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார்.

தமிழ்.5113ன் (ஆங்கிலம்.2011) மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறுவரையறை பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் அவர் கூறினார். அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால், மறுவரையறை செய்ய வேண்டாமா என தலைமை அறங்கூற்றுவர் கேள்வி எழுப்ப, அதற்கான அவசியமில்லை என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நரசிம்மா தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கை அடிப்படையிலேயே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசின் சார்பில் அணயமான முகுல் ரோகத்கி 9 புதிய மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றார்.  புதிய மாவட்டங்களில் மறுவரையறை முடியாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா என கேள்வி எழுப்பிய தலைமை அறங்கூற்றுவர்,  புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது வட்டார மறுவரையறை அவசியம் என்றார்.

மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன்? சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை அறங்கூற்றுவர் சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.  நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ, அதன்படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்றும்,  குறுக்கு வழியில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தக்கூடாது என்றும் தலைமை அறங்கூற்றுவர் தெரிவித்தார்.

அப்போது தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின் எந்த அறஙகூற்றுமன்றத்தாலும் தேர்தலை தள்ளிப்போட முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இதற்கு பதிலளித்த அறங்கூற்றுவர்கள், தேர்தலை ரத்து செய்ய முடியாது ஆனால் விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தலை தங்களால் நிறுத்தி வைக்க முடியும் என அறங்கூற்றுவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 9 மாவட்டங்களுக்கான தேர்தலை தள்ளி வைக்கமுடியுமா என்பது குறித்தும், பிரிக்கப்பட்ட மாவட்டங்களை கருத்தில் கொள்ளாமல் பழைய மாவட்டங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என அறங்கூற்றுவர்கள உத்தரவிட்டனர்.

இதையடுத்து நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,358.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.