Show all

எட்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு தாவினார் அதானி! இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது போர்ப்ஸ் இதழ்

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம். எட்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு தாவினார் அதானி. 

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் பிரபல போர்ப்ஸ் இதழ், நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில்,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பன்னிரெண்டாவது ஆண்டாக தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.  முதலிடத்தில் நீடிக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து   மதிப்பு ரூபாய் 3,64,940,00,00,000 ஆக (51.4 பில்லியன் டாலர்)  உள்ளது. 

தொழிலதிபர் கவுதம் அதானி 8 இடங்கள் முன்னேறி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலராக உள்ளது.  இந்துஜா சகோதரர்கள் (15.6 பில்லியன்), பலோன்ஜி மிஸ்திரி (15 பில்லியன் டாலர்), உதய் கோட்டக் (14.8  பில்லியன் )  ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

போர்ப்ஸ் இதழின் நடப்பு ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியல் அண்மையில் வெளியானது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில்  இருந்தார். அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் முதல் இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது  இடத்திலும் இருந்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,303.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.