Show all

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பேஷனாகி விட்டதாக பா.ஜ.க.பாராளுமன்ற உறுப்பினர்

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பேஷனாகி விட்டது என்று பா.ஜ.க. எம்.பி.யான கோபால் ஷெட்டி கூறியுள்ள கருத்து விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க. எம்.பி கோபால் ஷெட்டி, ‘வேலையின்மை மற்றும் வறட்சி காரணமாக எல்லா விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்வது இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தற்போது பேஷன் மற்றும் டிரெண்டாகிவிட்டது. மேலும் விவசாயிகள் குடும்பத்திற்கு ஒரு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் கொடுத்தால் அண்டை மாநில அரசுகள் ரூ.7 லட்சம் பணம் வழங்குகிறது. இதுவும் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது’ என்று கூறியுள்ளார்.

 

இவர் கூறிய கருத்து விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபால் ஷெட்டி கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

 

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அம்மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.