Show all

சீன நீர்மூழ்கி கப்பலை சமாளிக்க அமெரிக்காவிடம் 24 உலங்கு வானூர்தி வாங்க திட்டமாம்! உயரச்சிலை செய்வதில் சீனாவுக்கு அனுமதியாம்

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீன நீர்மூழ்கி கப்பலை, சமாளிக்க, இந்திய ராணுவம் அமெரிக்காவிடம், 24 உலங்கு வானூர்தி, வாங்க திட்டம்

இலங்கை அரசியலில் சீனாவின் அத்துமீறலை சமாளிக்க திட்டமில்லை. இந்தியாவில் உலக உயரச்சிலை அமைக்க சீனா தொழில்; நுட்பம். 

இந்திய பெருங் கடலில், சீன நீர் மூழ்கிகப்பல்களைச் சமாளிக்க மட்டும் அமெரிக்காவிடம், 24 உலங்கு வானூர்தி, வாங்க திட்டமாம்! என்ன பாஜக அரசியல்.

அமெரிக்காவிடம் இருந்து, ரூ13 ஆயிரத்து, 500 கோடி மதிப்பில், நவீன உலங்கு வானூர்திகள் வாங்க, நடுவண் அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியப் பெருங் கடலில், சீனாவின் அணுசக்தி மற்றும் டீசல், மின்சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றை எதிர் கொள்ள, அமெரிக்காவின் நவீன உலங்கு வானூர்திகள் உதவும் என, ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக மீனவர்கள் என்று கைவிடப் பட்ட இந்திய மீனவர்களை- தொடர்ந்து இந்தியப் பெருங்கடலில் தொல்லை அளித்து வரும் சிங்கள கடற்படையை சமாளிக்க, இந்திய ராணுவத்திற்கு ஒரு உலங்கு வானூர்தியும் கிடையாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,975.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.