Show all

தேர்தல் சல்லிக்கட்டுக்கு கட்சிகள் தீவிரம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.

 

தேர்தலுக்கு மிக குறுகிய  நாட்களே இருப்பதால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 234 தொகுதிகளுக்கும் வேட் பாளர்களை  அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

அது போல மற்ற கட்சிகளின் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியும்,  மக்கள் நலக்கூட்டணியும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தேர்தல் கருத்துப்பரப்புதலைத் தொடங்கி விட்டன.

மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோர் முதல் கட்டத் தேர்தல் கருத்துப்பரப்புதல் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டனர்.

 

அடுத்த கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு கருத்துப்பரப்புதலைத் தீவிரப் படுத்த மக்கள் நலக் கூட்டணி கட்சித் தலைவர்கள் திட்ட மிட்டுள்ளனர். அந்த கூட்டணியுடன் உடன்பாடு செய்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கும்மிடிப்பூண்டியில் கருத்துப்பரப்புதலைத் தொடங்கினார்.

இன்று விஜயகாந்த் அம்பத்தூர், வில்லிவாக்கம், ஆவடி, மதுரவாயல், வில்லிவாக்கம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார். பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களும் ஏற்கனவே கருத்துப்பரப்புதலைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

 

அனைத்து கட்சிகளும் தேர்தல கருத்துப்பரப்புதலைத் தீவிரப்படுத்தி விட்டதால் தி.மு.க.வும் களப்பணியை விறுவிறுப்பாக்க திட்டமிட்டுள்ளது. 

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு; எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த கட்டமாக நாளை வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பிரத்யேகமாக நவீன கருத்துப்பரப்புதல் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி 23-ந்தேதி (சனிக்கிழமை கிழமை) கருத்துப்பரப்புதலைத் தொடங்க உள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி கருத்துப்பரப்புதலைத் தொடங்க உள்ளார்.

அவர்கள் இருவரும் கருத்துப்பரப்புதல் வாகனங்களில்  தொகுதி வாரியாக சென்று  தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளனர்.

 

ஏப்ரல் 23 ந்தேதி மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டையில் தேர்தல் கருத்துப்பரப்புதலைத் தொடங்குகிறார் ,மாலை 6 மணிக்கு  மரக்காணம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் கருத்துப்பரப்புதலை மேற்கொள்கிறார்.

25 ந்தேதி திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.