Show all

பேனாவால் எழுத, கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை

பேனாவால் எழுதப்பட்ட கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பேனாவினால் எழுதப்பட்ட அல்லது கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. இது அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் கிறுக்கள்கள் இருந்தாலும் வழக்கம் போல் அவற்றை பயன்படுத்தலாம் என்றும் வங்கிகள், வணிக நிலையங்கள் என அனைத்திலும் அவை செல்லத்தக்கவை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரூபாய் நோட்டுகளில் யாரும் எழுதவோ, கிறுக்கவோ வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எழுத்துகள் மறைந்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.