Show all

தமிழகப் பெண்களுக்கு ஏன் அரைகுறை ஆடை! குடியரசு நாள் விழா மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்பில்; நிகழ்ச்சியாளர் குறும்பு

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய நாட்டின் 70ஆவது குடியரசு நாள்; விழாவையொட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்புகளில் தமிழக மக்களின் ஆடை சித்தரிக்கப்பட்ட விதம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அனைத்து மாநிலங்களும் தத்தம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆடை அணிந்து வந்த நிலையில், தமிழக உழவர்கள் நாற்று நடுவது, ஏறு தழுவுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக பெண்கள் ரவிக்கை அணியாமல் வெறும் புடவை மட்டும் அணிந்திருப்பதுபோல சித்தரிக்கப்பட்டது. உழவர்களும் ஆடையின்றி வெறும் கோவணம் மட்டும் கட்டியிருப்பது போலச் சித்தரிக்கப்பட்டது. இது தமிழகத்தின் தரப்பிலிருந்து கண்டனங்களை பெற்றுள்ளது.

வெளிநாட்டவர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளும் குடியரசு நாள் நிகழ்ச்சியில் தமிழர்கள் அரைகுறை ஆடையுடன் சித்தரிக்கப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'இதில் உள்நோக்கம் ஏதுமில்லை. காந்தியின் 150ஆவது பிறந்தநாள் வரவுள்ளதை முன்னிட்டு கலாச்சார அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக உழவர்கள் அரை ஆடையுடன் இருப்பதால் இனி நானும் அரை ஆடையுடன் இருக்கப் போகிறேன் என காந்தி தன்னுடைய ஆடை அணியும் பழக்கத்தை மாறியதைக் காட்டும் வகையில் அணிவகுப்பில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டது' என்று விளக்கமளித்துள்ளனர். அது சரி பெண்களுக்கு ஏன் அரைகுறை ஆடை?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.