Show all

2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் ஊழல்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடையவர்கள் மீதான வழக்கில் இன்று 5 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளுக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. இவற்றில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றது தெரியவந்தது. அந்த வகையில் காமன்வெல்த் போட்டிகளுக்காக தெருவிளக்குகள் வாங்கியதில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தெருவிளக்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை முறைகேடாக பெற்றதாக ஸ்வேஸ்கா பவர்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.பி.சிங், இயக்குநர் ஜே.பி.சிங் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் உள்பட 5 பேருக்கு தலா நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.