Show all

ரூ.2 கோடி பரிசு எப்ப தருவீங்க? பாஜக மாநிலஅரசின் வாக்குறுதி மீதான, தங்கப்பதக்க வீராங்கனை நம்பிக்கையின்மை பதிவு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துப்பாக்கி சுடுதல் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை, மனு பகேர், ஹரியானா மாநில அமைச்சர் அறிவித்த, 2 கோடி ரூபாய் பரிசு உண்மையில் கிடைக்குமா? என, தனது கீச்சுப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், மனு பகேர், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை. இவர், காமன்வெல்த், இளைஞர் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில், துப்பாக்கி சுடுதல் பிரிவில், இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார். 

கடந்த, மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த இளைஞர் ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடுதல் போட்டியில், மனு பகேர் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, மனு பகேரை கவுரவிக்கும் வகையில், ஹரியானா மாநில அரசு சார்பில், 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த, அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர், அனில் விஜ் தெரிவித்தார். ஆனால் இதுவரை, மனு பகேருக்கு பரிசு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று, மாநில அமைச்சர் அனில் விஜ் வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள் காட்டி, கீச்சுவில் வீராங்கனை மனு பகேர், 'ஐயா! நீங்கள் கூறியது உண்மைதானா? எனக்கு, 2 கோடி ரூபாய் பரிசு உண்மையிலேயே கிடைக்குமா?' என பதிவிட்டார்.

இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளிக் குவிக்கவே, அமைச்சர் அனில் விஜ்ஜிக்கு இந்த சேதி போக- 

அனில் விஜ் தனது கீச்சுப் பதிவில், 'பொது வெளியில் இத்தகைய கருத்தை தெரிவிப்பதற்கு முன், மாநில விளையாட்டுத் துறை அமைச்சகத்தை, மனு பகேர் அணுகி இருக்க வேண்டும். அதை விடுத்து, மாநில அரசை விமர்சித்து இருப்பது முறையன்று. இந்த மாத இறுதிக்குள், உங்களுக்கு, மாநில அரசு அறிவித்த, 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

பாஜக வாக்குறுதியின்னாலே, பொதுமக்கள் மட்டுமில்லாமல் உயர்தளத்தில் இருப்பவர்களுக்குக் கூட நம்பிக்கை வரமாட்டேன்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.