Show all

2017ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை.

2017ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை.

நடைபெறவுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோ நோவ், இவர் கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஆவார். இவருக்கு வெர்டிங் ஹோப்மான் என்ற மரபணு திசுக்கள் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இது குறித்து பல நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது இவருக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என ஆலோசனை கூறினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து இத்தாலி நரம்பியல் நிபுணர் டாக்டர் செர்ஜியோ கேனவெரோவும், சீன அறுவை சிகிச்சை நிபுணர் ரென்ஸியோடாங்கும் இணைந்து இந்த அறுவைசிகிச்சை

செய்ய திட்டமிட்டனர்.

சீனாவின் ஹார்பின் மருத்துவப் பல்கலைக்காக ஆஸ்பத்திரியில் வைத்து அறுவைசிகிச்சை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த அறுவைசிகிச்சை வருகிற 2017ம் ஆண்டில் டிசம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நபர் என்ற பெருமையை வலேரி ஸ்பைரி டோநோவ் பெறுகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.