Show all

பன்வாரிலால் புரோகித்தும், மோடியும்- இந்தியாவிற்கும், தமிழகத்திற்குமான சாபகேடுகள்! கொந்தளிப்பவர் வைகோ அவர்கள்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாபகேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் மோடி குறித்தும், ஆளுநர் குறித்தும் கருத்து தெரிவித்தார். 

அதில் அவர் கூறியதாவது, மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

பேருந்து எரிப்பு வழக்கில் 3 அப்பாவி மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறும் செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்? 

இதற்கு எதிராக நாளை போராட்டம் நடக்க உள்ளது. இதனை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க. முழு ஒத்துழைப்பு தருகிறது. என்று தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.