Show all

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்குப் பதிலாக அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 118 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட மொத்தம் 103 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இந்திய அணி தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஷிகர் தவண் 13 ரன்களில் வெளியேறினார்.

ரோஹித் சர்மா (65 ரன்கள்), விராட் கோலி (77 ரன்கள்) மற்றும்  தோனி 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆட்ட முடிவில் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியா தோல்வியைத் தழுவியது.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் மோர்ன் மோர்கெல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.  இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.