Show all

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி யாருக்கு சொந்தம்

சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருக்கும் 11 திரையரங்குகள் ஜாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.

இந்த நிலையில், கிளாசிக் மால் நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்ற ஷாப்பிங்மால் மும்பையில் உள்ள கிளாசிக்மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.

எங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் 11 திரை கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் அமைப்பதற்காக, கிளாசிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் தமிழக அரசிடம் இருந்து பார்ம் ‘‘என்’’ லைசென்ஸ் பெற்று,

திரையரங்குகள் நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு

1-2-2015 தேதி முதல் 14-12-2020 வரை வாடகைக்கு விட்டுள்ளது.

ஜாஸ் சினிமாஸ் மாத வாடகையை 1-2-2015 முதல் முறையாக எங்கள் நிறுவனத்திற்கு செலுத்தி வருகிறது.

ஊடகங்களில் லக்ஸ் சினிமாஸ் என்ற பெயரில் உள்ள 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் ரூ. 1000கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனைத்தும் உண்மைக்கு புறம்பான செய்திகள்.

எங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளை நாங்கள் யாருக்கும் விலைக்கு விற்கவில்லை. எங்களுக்கு சொந்தமான சொத்தில் ஜாஸ் சினிமாஸ் மாத வாடகை உரிமை அடிப்படையில் திரையரங்குகள் நடத்தி வருகிறது.

செய்திதாள்கள், ஊடகங்களில் காட்டப்படும் லக்ஸ் சினிமாஸ் கட்டுமானம் அனைத்தும் எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதை இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.