Show all

தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கிய மோடி, தேயிலை விவசாயிகளை வஞ்சித்து விட்டார்

தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கியதாக தனது தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, தேயிலை விவசாயிகளை வஞ்சித்து விட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக இங்கு வந்திருந்த மோடி,

புத்துணர்ச்சி அளிக்கும் அசாம் தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீர் மூலம் எனது தொடக்க காலத்தில் மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்தேன். அதனால், அஸ்ஸாம் மக்களை என்னால் மறக்கவே முடியாது. என் மனதில் அவர்களுக்கு நீங்காத இடம் உண்டு

என்று அஸ்ஸாம் தேயிலையைப் பற்றி வெகு பிரமாதமாக புகழ்ந்து பேசினார்.

ஆனால்,

மோடியின் ஆட்சியில் தேயிலை விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. அஸ்ஸாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்ட உணவுப்பொருட்களும் கிடைக்காமல் செய்ய தற்போதைய நடுவண் அரசு முயற்சித்தது.

அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்திய முதல்வர் தருண் கோகாய் மற்றும் காங்கிரஸ் தலைவர் அஞ்சன் தத்தா ஆகியோரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

 

தற்போது, தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளும், மலைவாழ் மக்களும் தங்களுக்கான ‘நல்ல காலம்’ எப்போது வரும்? என்று ஏக்கத்துடன் கேட்கின்றனர்.

 

சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கான வளர்ச்சி நிதியையும் இந்த அரசு குறைத்து விட்டது. மோடி தலைமையிலான நடுவண் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு விலைவாசி உயர்வு ஏழை மக்களின் முதுகை உடைக்கிறது. அத்தியாவசிய மருந்துகளைக்கூட சராசரி மக்கள் வாங்க முடியாத நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது

என்று கடுமையாகச் சாடினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.