Show all

இன்று இந்தியக் குடியரசு நாள்!

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது நாட்டுக்கு எப்போது விடுதலை வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு நாள் பற்றி கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் விடை சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

விடுதலை அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட பிரம்மசாரி,வேலு நாச்சியார் இன்னும் எதனையோ வீரர்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.

இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல்,அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி..... இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடினர். 

யாரிடம் அடிமைப் பட்டிருந்தோம்? ஏன் அடிமையானோம்? அந்த அடிமைத்தனத்திற்கு முன்பு நாம் யார்? என்பதில் கூட அவ்வளவு பெரிய தெளிவான விடை யாரிடமும் பெரிதாக இருக்க முடியாது. 

3500 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் வருகை நாவலந்தேயம் என்ற இந்தியாவை வடக்கு தெற்காகப் பிரித்தது. வடக்கே ஆரியர் ஆட்சி வடமொழி வளர்ச்சி, ஆற்றங்கரையோர கிராம நாகரீகமாக வேதகால நாகரீகம் முன்னெடுக்கப் பட்டது. 

தொல்குடி மக்களான சிந்துவெளி நகர நாகரீக மக்களோடு ஆரியர்களின் தொடர் பிணக்குகள். நள்ளிரவில் அவர்கள் அணைகளை உடைத்து தகர்த்தல். அவர்கள் வேளாண்மை நிலங்களை நாசப்படுத்துதல், அவர்கள் தம் முன்னோர்களைப் போற்றிக் கொள்ளும் நடுகல் வழிபாட்டை, ஆண்குறியை வணங்குகிறார்கள் என்று நையாண்டி செய்தல் என்கிற நடவடிக்கை வரலாறுகள் ஆரியர்களுக்கு வேதங்களாகவும், மகாபாரத, இராமயணங்களாகம் அதீத புனைவுகளைக் கட்டமைத்து தம் மக்களுக்கான வாழ்க்கை முறைகள் உருவாக்கிக் கொண்டார்கள். நாவலந்தேயத்தின் ஒட்டு மொத்த ஆட்சியையும் பிடித்து விட்டதாகவும் பாரததேசம் என்றும் மக்களை கொண்டாடச் செய்தார்கள். 

தென்னிந்தியாவிலும் பரவிய ஆரியர் செல்வாக்கு: மக்களையும் மன்னர்களையும் பரித்தாளும் சூழ்ச்சிக்கு வித்திட்டது. மக்களுக்காக ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள், ஆரியர்தம் புராண, இதிகாச, சாதிய, பிறப்படிப்படை, புளுகுகள், ஆதீத கற்பனைகள், ஆகியவற்றுக்கு பலியாகி, மொழி, கலை இலக்கிய தொழில் நுட்ப வளர்ச்சிகளை முடமாக்கினார்கள். 1.மன்னர்கள் பெயருக்கு ஆட்சி செய்தார்கள்; 2.ஆரியர்கள் வேதம் ஓதினார்கள; 3.மக்கள் உழைப்பால் பிழைப்பு நடத்தினார்கள். நாட்டில் ஏனோதானோவென்று நிருவாகம் நடந்தது. 

வடக்கில் முகமதியர்கள் படையெடுத்தார்கள். கலப்பு மொழிகள், கலப்பு வாழ்க்கை முறைகள், கலப்பு பொருளாதாரம், இவற்றுக்கெதிராக ஆரியர்கள் கிளர்ச்சி இப்படி வடக்கும் சின்னா பின்;னம் ஆனது.

இந்த சிக்கலுக்கெல்லாம் முந்தைய காலத்து இந்தியா நாவலந்தேயம் என்ற பெரு நிலப்பரப்பாக சேர, சோழ, பாண்டியர்கள் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. மன்னர்கள், அறிஞர்கள், மக்கள் என்ற மூன்று தளங்களில் நாட்டின் நிருவாகம் முன்னெடுக்கப் பட்டது. 1.மக்கள் தொழில் செய்தார்கள். கடல்கடந்தும் வணிகம் புரிந்தார்கள். இசை, மற்றும் நாடகக் கலை வளர்த்தார்கள். 2.அறிஞர்கள் மொழி வளர்த்தார்கள். இலக்கியம் காப்பியம் படைத்து மன்னர்களுக்கும் மக்களுக்கும் பாலமாக, நாட்டின் வளர்ச்சிக்கான ஊடகங்களாக விளங்கினார்கள். 3.மன்னர்கள் தங்கள் மக்களுக்கான தொழில், வணிகம், கலை வளர்ச்சிக்கு பாதுகாப்பு அரணாக விளங்கினார்கள். மண்ணைக் காத்தார்கள். அப்போதைய நாவலந்தேய மக்களுக்கு: உலகம் முழுவதும் வணிகத் தொடர்பு இருந்த காலம். 

நாவலந்தேயம் கல்வி, தொழில்நுட்பம், கலை, இலக்கியம், வணிகத்தில் சிறந்த நாடாக உலகினரால் அறிப்பட்டது. தங்கள் நாட்டிற்கு வணிகம் செய்வதாக வந்து முத்துக்கைளையும், மெல்லிய துணி ஆடைகளையும், மயில்தோகை, ஏலம் கிராம்பு போன்ற வாசனைப் பொருள்களையும் கொடுத்து விட்டு, தங்கள் நாட்டு வளங்களை நாவலந்தேயத்தவர்கள் கொள்ளையிட்டு செல்வாதாகக் கூட எகிப்தின் தாலமி போன்ற அறிஞர்கள் புலம்பினார்கள். 

ஆதனால் உலகினர் குறிப்பாக ஐரோப்பியர்கள் தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து 'நாவலந்தேயம்' என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது. அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - இந்தியா என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

வணிகத்திற்காக ஐரோப்பியர் தேடி வந்த நாவலந்தேயத்தில், நாகரிகமில்லாமல், குறுநில மன்னர்கள் ஆட்சிகளுக்கு கட்டுப் பட்டு, ஆண்டான் அடிமையாக, தடி எடுத்தவன் தண்;டல்காரனாக, மூடநம்பிக்கை, அதீதவாதம், புராண புளுகு மூட்டைகளின் ஆதிக்கம் என்று காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை நடத்தி வந்த நாவலந்தேயத்தை பிரிட்டிஷ் பேரரசுக்கு கீழ் இந்தியா என்று ஒருங்கிணைத்து பல்வேறு நாகரிக வளர்ச்சிக்கு முன்னெடுத்தார்கள். 

பலமொழிகள், பலவேறு கலாச்சாரங்கள், பலவேறு மதங்கள், பலவேறு சாதிகள் என்றிருந்த நம்மை அவர்கள் நாவலந்தேயத்தை இந்தியா என்று தேடி வந்த தலைப்பில் இந்தியா, இந்திய மக்கள் என்று ஒரே பெயரில் நம்மை நிருவாகப் படுத்தினர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள். 

நாமும் இந்தியர்கள் என்ற தலைப்பில் நம்மை ஆளும் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்று நமது மக்களே நம்மை ஆளும் மக்களாட்சிக்காக போராடி விடுதலை பெற்றோம். 

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி அட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம். 

மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் விடுதலையைப் போராடி வாங்கிவிட்டோம். அதன் பின் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலேயேர் வகுத்துத் தந்த சட்டங்களின் அடிப்படையில். சட்டமன்றம், பாராளுமன்றம், மாநில அரசு. நடுவண் அரசு, தேர்தல், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் என்றெல்லாம் நமது நிருவாகத்திற்கான. நமது இந்தியச் சட்டங்களை வகுத்துக் கொண்ட நாளைத்தான் ஒவ்வொரு ஆங்கில ஆண்டின் சனவரி 26ஆம் நாளை இந்தியக் குடியரசு நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.