Show all

உலக அளவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர இந்து மற்றும் புத்த மதங்களின் முயற்சி

முரண்பாடுகளைப்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உலக அளவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர இந்து மற்றும் புத்த மதங்களின் முயற்சி என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு

அதிகார பலம் மற்றும் வலுவான சக்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் நிலைமை இப்போது மாறி விட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.

போரினால் ஏற்படும் பாதிப்புகளை நாம் கண்டு இருக்கிறோம். இப்போது போரின் தன்மை மாறிவிட்டது; ஆபத்துகளும் அதிகரித்து விட்டன. போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பங்கு கொள்வது, நீண்ட காலம் போர் நடப்பது என்ற நிலை மாறி, ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் என்கிற நிலை உருவாகி விட்டது. ஆனால் போர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஆகாது.

பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.

இந்த பூமியில் நமது எதிர்கால சந்ததியினர் அமைதியுடனும், கண்ணியத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக மோதல்கள் அற்ற உலகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.