Show all

இந்த ‘நோட்டா’ பட்டனை பயன்படுத்தலாம்.

தேர்தலில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான நோட்டா வசதியை தேர்தல் ஆணையம் கடந்த 2013-ல் அறிமுகப்படுத்தியது. மேற்குறிப்பிட்டுள்ளவர்களில் எவருமில்லை என்பதை குறிப்பிடும் ‘நோட்டா’ பட்டன் வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும். போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், வாக்காளர்கள் இந்த ‘நோட்டா’ பட்டனை பயன்படுத்தலாம்.

இந்நிலையில், முதல்முறையாக பீகார் சட்டமன்ற தேர்தலில் நோட்டா பட்டனுக்கு வாக்குச்சீட்டுடன் கூடிய கருப்பு நிற பெருக்கல் குறியை குறியீடாக அறிமுகப்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

இந்தக் குறியீட்டை அஹமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

2014 பொதுத்தேர்தலில் 60 லட்சம் பேர் நோட்டா பட்டனைப் பயன்படுத்தி இருந்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.