Show all

பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் செல்லப்போவது இல்லை.

பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் செல்லப்போவது இல்லை என்று அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் குறித்த உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா கூறியதாவது:

போர் மூளும் என அச்சுறுத்துவது அல்லது நாங்கள் அணு ஆயுத வல்லமை கொண்டவர்கள் என்றோ,  அணு குண்டுகளைப் பயன்படுத்துவோம் என்று கூறுவதோ எந்த வகையிலும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க உதவாது. பிரச்சினைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.  வானத்துக்கு மேலே சென்றால் கூட அவர்களால் (பாகிஸ்தான்) காஷ்மீரை கைப்பற்ற முடியாது.

இல்லாத ஒன்றுக்காக ஏன் மேலும் துன்பங்கள் தொடர வேண்டும்.

ஒரே ஒருவிஷயம் மிகவும் தெளிவான ஒன்று. எல்லைகள் ஒரு போதும் மாறாது. எத்தனை நாடுகள் எல்லையை மாற்ற தயாராக உள்ளது. எல்லைகள் ஒருபோதும் மாறப்போவது இல்லை. அவர்களிடம் வெடிகுண்டுகள் உள்ளன. நம்மிடமும் உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிடமே நான் ஒரு கோரிக்கை முன்வைக்க விரும்புகிறேன்.  சோகங்களுடன் வாழ்வதை விட இணைந்து முன்னோக்கி அடுத்த கட்டத்துக்கு  இருநாடுகளும் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.