Show all

திக், திக், திக். மோடி இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்! 62 கம்பெனி படைகள் பாதுகாப்பு; இரவு முழுவதும் 8 கம்பெனி படை வீரர்கள் ரோந்து

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி இன்று ஜம்மு, காஷ்மீர் மற்றும் லே ஆகிய பகுதிகளுக்குப் பயணிக்கிறார். மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மோடி இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் செல்கிறார். மோடி இன்று ஜம்மு, காஷ்மீர் மற்றும் லே ஆகிய பகுதிகளுக்குப் பயணிக்கிறார்.

சிறிநகரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தால் ஏரியைப் பார்வையிடுகிறார். 

மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 62 கம்பெனி படைகள் பாதுகாப்புப் பணியில் உள்ளன. இரவு முழுவதும் 8 கம்பெனி படை வீரர்கள் ரோந்து மேற்கொண்டனர். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,052.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.