Show all

தொடரும் மாட்டிறைச்சி பிரச்சனை

ஐதராபாத்தில் உள்ளது உஸ்மானியா பல்கலைக் கழகம். தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் இப்பல்கலைக்கழக மாணவ,மாணவிகளின் பங்கு மகத்தானதாக அமைந்தது. தனி மாநிலம் கோரி இந்தப் பல்கலைக்கழக மாணவ,மாணவிகள் பலர் உயிர் தியாகம் செய்தனர். இதனால் உஸ்மானியா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்குத் தெலுங்கானாவில் தனி மதிப்பு உள்ளது.

இங்கு படிக்கும் தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் சங்கத்தினர் இன்று கல்லூரியில் மாட்டிறைச்சி விழா நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு ஒரு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவ்வாறு நடந்தால் அதற்கு போட்டியாக பன்றிஇறைச்சி விழா நடத்தப்படும் என்று சில அமைப்பினர் அறிவித்தனர்.

இந்தப் பிரச்சினை குறித்து ஐதராபாத் நகர நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எந்த விழாவும் நடத்த கூடாது என தடை விதித்து உத்தர விட்டனர்.

நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமுல்படுத்தவும் அதோடு உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அசம்பாவிதங்கள் நடை பெறாமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் தடையை மீறி திட்டமிட்டபடி மாட்டிறைச்சி விழா நடத்தப்படும் என்று மாணவர் அமைப்பினர் அறிவித்தனர். இதனைத் தடுக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பல்கலைக் கழகத்தில் இன்று ஆயுதம் தாங்கிய போலீஸ் படை குவிக்கப்பட்டது.

மாட்டிறைச்சி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த 16 மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். இந்த மாட்டிறைச்சி சாப்பிடும் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த முயற்சித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜாசிங்கையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.