Show all

மோடிக்கு கெஜ்ரிவால் தக்க நேரத்தில் சரியான பதிலடி

மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (26-ந்தேதி) மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றார்.

 

இன்று பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டை தொடங்கி உள்ளது. இதையொட்டி அரசின் சாதனைகளை விளக்கி டெல்லியில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இது தவிர பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக ஊடகங்கள் மூலம் நடுவண் அரசு விளம்பரம் செய்துள்ளது.

 

இதுபற்றி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த ஒரு நிகழ்ச்சி தொடர்பான விளம்பரத்திற்காக மோடி அரசாங்கம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், டெல்லி மாநில அரசாங்கம் முழு ஆண்டிற்கும் ரூ.150 கோடிக்கும் குறைவாகவே செலவு செய்துள்ளது’ என்றார்.

 

ஆம் ஆத்மி அரசாங்கம் பெரிய விளம்பரத்திற்கு அதிக தொகை செலவு செய்வதாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே குற்றம்சாட்டிய நிலையில், கெஜ்ரிவால் தற்போது பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.