Show all

மெட்ரோ தொடர்வண்டிச் சேவையில் கோளாறு! தொடங்கி இரண்டாவது நாளே: புலம்பினர் பயணிகள்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை தொடங்கியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்றும், இன்றும் பயணிகள் சென்னை நகர் முழுவதும் மெட்ரோ வண்டிகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதனால் வழக்கமாக மெட்ரோ வண்டியில் செல்வோர் மட்டுமின்றி இலவசமாக பயணிப்பதற்கு ஏராளமான பயணிகள் மெட்ரோ வண்டி நிலையம் வந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிஎம்எஸ் மெட்ரோ வண்டி நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ வண்டி சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. 

அலுவலகங்களுக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர், அவசர வேலையாக செல்வோர் என பல தரப்பினர் தொடர்வண்டி சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சேவை பாதிப்பு குறித்து முந்தைய நிறுத்தத்திலேயே சொல்லி இருக்கலாம். நாங்கள் வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்திருப்போம். வழியிலேயே கோளாறு காரணமாக எங்களை இறக்கிவிட்டால் எங்கே போவது என்று கூறினர். இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும், வல்லுநர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் மெட்ரோ வண்டி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,060.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.