Show all

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டு.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெகு விரைவில் இந்த நோட்டுகளை வெளியிட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

ரூபாய் நோட்டுக்கான சின்னத்துடன் எல் என்ற ஆங்கில எழுத்து இணைக்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  நோட்டுக்களின் எண்கள் சிறிய வடிவத்தில் ஆரம்பித்து பெரிய வடிவத்தில் முடியும் என்று அவர்கள் கூறியுள்ளார். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் கரன்சி நோட்டுகளில் பின்பற்றபட்டுள்ளதை அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.  

2014-2015-ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் 1000மற்றும்500 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பில் 85 சதவீதமும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான நோட்டுகளின் எண்ணிக்கையில் 84 சதவீதமும் புழக்கத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.