Show all

ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  தனது டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடன் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி அடைந்தது. இதனால் தான் இந்த முடிவுக்கு வாட்சன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த  2005 ஆம் ஆண்டு சிட்னியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வாட்சன், மொத்தம் 59 டெஸ்டில் விளையாடி உள்ளார். இதில் 3731 ரன்  (அதிகம் 176, சராசரி 35.19, சதம் 4, அரை சதம் 24) எடுத்துள்ளதுடன், 75 விக்கெட்டும் (சிறப்பு: 6/33) வீழ்த்தியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.