Show all

தில்வாலே திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டம்

ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடித்து வெளியாகியுள்ள தில்வாலே ஹிந்தி திரைப்படத்தைத் திரையரங்கில் திரையிட்டப்போது அதை பஜ்ரங்தள் அமைப்பினர் தடுத்துநிறுத்தினர்.

சகிப்புத்தன்மை குறித்து ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் அண்மையில் அளித்திருந்த பேட்டி நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ரோஹித்ஷெட்டி இயக்கத்தில் நடிகர்ஷாரூக்கான், நடிகை காஜல், நடிகர் வருண்தவான், நடிகை கிரிதி சானன் உள்ளிட்டோர் நடித்து அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தில்வாலே.

இப்படம் மங்களூருவில் உள்ள சிட்டிசென்டர்மால், ஃபாரம் பிஸ்சா, பாரத்மால் ஆகிய 3 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன. இப்படத்தை திரையிடுவதற்கு பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகளில் நுழைந்த பஜரங்தள் அமைப்பினர், திரைப்படத்தைத் திரையிடுவதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். திரைப்படத்தைத் திரையிடுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதைத் தொடர்ந்து, திரைப்படத்தைத் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மேலும் எதிர்ப்பையும் மீறி திரைப்படத்தை திரையிட்டால் நிலைமை மோசமாகும் என்று திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, 3 திரையரங்குகளிலும் நேற்று தில்வாலே திரைப்படம் ரத்துசெய்யப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.