Show all

தேர்தல்செலவுகளைக் கணக்குக் காட்டாத 42 வேட்பாளர்களுக்குத் தடை

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத்  தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்க முடியும்.

                          

1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவின் படி, தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் 42 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து இருக்கிறது.

 

2011 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களுக்கும், 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இவர்கள் தேர்தல் செலவுகளை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால் வரும் சட்டமன்றத்  தேர்தலிலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைபெறும் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. 42 வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.