Show all

மோடியை நோக்கி, ராகுலின் ஒரே கேள்வி! பணக்காரத் தொழிலதிபர்களுக்கு உதவும் உங்கள் மனம், ஏழை உழவர்களுக்கு முடங்குவது ஏன்?

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அவர்கள்: ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்பு  செய்யப்படும், ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வேளாண் கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார். தான் இந்த நாட்டின் 'காவலாளி' தலைமை அமைச்சர் அல்ல என்றும் கூறினார். நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டார்.

மோடி, தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறார். ஆனால் உழவர்களுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவின் பணக்காரர்கள் 15 பேரின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார். இந்திய உழவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய அவர் தயாரில்லை.

எல்லோரையும் ஒரே மாதிரி கவனிக்கும்படி தான் கூறுகிறோம். பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும்போது, உழவர்கள் கடனையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். இவ்வாறு தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாணவர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,987.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.