Show all

டெல்லியில் காதை கிழிக்கிறது! இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் முழக்கம்: 'கடனில்லா உழவன், தற்கொலை இல்லா இந்தியா' பேரணி

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் இன்று 29 மாநில உழவர்கள் சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி செல்ல உள்ளனர். நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட உழவர்கள் அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர்.

கடனில்லா உழவன், தற்கொலை இல்லா இந்தியா என்பது இவர்களின் முழக்கமாகும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், விளைபொருட்களுக்கு உரிய விலை, பயிர் கடன் தள்ளுபடி, நாடாளுமன்றத்தில் வேளாண்மைக்குத் தனியாக கூட்டத் தொடர் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. 

ராம்லீலா திடலில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் ஊர்வலமாக செல்லவுள்ளனர். இந்தப் பேரணியில் உழவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்கிறார்கள். இன்றைய பேரணியின்போது, நாடாளுமன்ற சாலையில் எதிர்க் கட்சி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,987.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.