Show all

முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

எல்லைக்கடவு விண்ணப்பம் செய்யும் நபரிடமிருந்து முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று நடுவண் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

 

 

 

எல்லைக்கடவு பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள்  www.passportindia.gov.in  என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்பாக எல்லைக்கடவு விண்ணப்பம் செய்யும் போது குடும்ப அட்டை முகவரிக்கான ஆவணமாக ஏற்றக்கொள்ளப்பட்டது. தற்போது, அந்த இணையதளத்தில் முகவரிக்கான சான்று ஆவணத்தில் இருந்து, குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

நடுவண் அரசின் இந்த ஆணையை வெளியுறவு அமைச்சகம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, எல்லைக்கடவு விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து எல்லைக்கடவு அலுவலகங்களிலும் அமலுக்கு வரும் என நடுவண் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.