Show all

இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவை எளிதாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் கடைசி 32 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 123 ரன் (257 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்தார். 

பின்னர் 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.  சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மோசமான ஆட்டத்தால் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.