Show all

நியமிக்கப்பட்ட ஆளுநர் கிரண்பேடி மிதிவண்டி ஓட்டி மகிழும் வக்கிரம்! மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் போராட்டத்தில் இருக்கும் வேளையில்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாரயணசாமிக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறன்றனர். 

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமியுடன் கிரண்பேடி ஞாயிற்றுக் கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியிருந்தார். ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் முதல்வருக்கு கடிதம் ஒன்றை ஆளுநர் அனுப்பியுள்ளார். அதில் எப்போது, எங்கே, யாரையெல்லாம் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

கடிதத்தை பெற்றுக்கொண்ட நாராயணசாமி, செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது 'அரசால் அங்கீகரிக்கப்படாத சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் பங்கேற்கக் கூடாது என்று கூறியிருந்தேன். 6 மணி வரை பதில் வரவில்லை. 7.10க்கு கடிதம் வந்தது. அதில் கிரண்பேடியின் ஆணவம் தான் தெரிந்தது. 

கிரண்பேடி பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்று கடைசியாக வந்த கடிதத்தின் மூலம் தெரிகிறது. டெல்லி முதல்வர் மற்றும் துணைமுதல்வர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வருகின்றனர். போராட்டத்திற்கு பயந்து கிரண்பேடி முன்கூட்டியே புதுச்சேரி வந்துள்ளார். இது 75விழுக்காடு வெற்றி. யார் சொல்வதையும் அவர் கேட்க மாட்டார்' என்று தெரிவித்தார். 

ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் நாராயணசாமி முழக்கப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருந்த போது ஆளுநர் மாளிகையினுள் கிரண்பேடி சுமார் 45 நிமிடங்கள் மிதிவண்டி ஓட்டி உடற்பயிற்சி மேற்கொண்டார்.

மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் முதல்வர் மாநில மக்களின் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது, நடுவண் அரசால் நியமிக்கப் பட்ட ஆளுநர் மாநில முதல்வரை அசட்டை செய்வது மாநில மக்களை அவமதிக்கும் செயலாகும் ; அப்படியான ஆளுநர் எங்கள் மாநிலத்திற்கு தேவையில்லை என்று மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.