Show all

கேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள் என்று உம்மன் சாண்டி பதிலடி

கேரளாவை சோமாலியாவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியதில் கோபம் அடைந்து உள்ள உம்மன் சாண்டி,

கேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள் என்று பதிலடி கொடுத்து உள்ளார்.

கேரளா மாநிலத்தில் வரும் 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதுவரையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போட்டிபோட்டு விமர்சனங்களை முன்வைத்தனர். பிரதமர் மோடி கருத்துப்பரப்புதல் கூட்டங்களில் பேசியபோது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளை விமர்சனம் செய்தார்.

இதில் ஒருபடி மேலே போன பிரதமர் மோடி

கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார். பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டது உம்மன் சாண்டிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

பிரதமர் அரசியல் நாகரித்தை வெளிக்காட்ட கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதை திரும்ப பெறவேண்டும் என்று உம்மன் சாண்டி வலியுறுத்தி உள்ளார்.

கேரளாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகளின் உடல்நலத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு உள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து உள்ள கேரளா முதல்-மந்திரி உம்மன் சாண்டி பொருளாதாரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் கேரளா தேசிய சராசரியில் உயர்நிலையில் உள்ளது. ஆனால் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார் என்று கூறிஉள்ளார். சோமாலியாவுடன் தேசத்தின் ஒருமாநிலத்தை ஒப்பிடுவது பிரதமர் மோடிக்கு அவமானம் கிடையாதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

பிரதமர் மோடி இரண்டு வருட ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் விமர்சனம் செய்து உள்ளார்.

பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்து உள்ள உம்மன் சாண்டி,

பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கோரிக்கை விடுக்கின்றேன், கேரளாவில் உள்ள பிரச்சனைகளை பேசுவதற்கு முன்னதாக குஜராத் மாநில வளர்ச்சியை பற்றி பேசுங்களேன்.

நீங்கள் குஜராத் மாநிலத்தில் பணம் படைத்தோருக்கு சாதகமான கொள்கையினைச் செயல்படுத்திய போது, உண்மையில் ஏழை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். எங்களுடைய மாநிலத்திலும் இதுபோன்ற கொள்கையினை அமல்படுத்தவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நாங்கள் எப்போது எல்லாம் பெரிய திட்டங்களை அமல்படுத்துகிறோமோ, அப்போது எல்லாம் நாங்கள் சாதாரண மனிதனின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.

 

பீகார் மாநிலத்தில் கோடிக் கணக்கில் திட்டங்களை அறிவித்தீர்கள் ஆனால் பிற மாநில மக்களை ஏமாற்றினீர்கள்.. இந்த முறை நீங்கள் இதுபோன்று பெரிய வாக்குறுதியை மாநிலத்திற்கு அறிவிக்கவில்லை, இதுவே எங்களுக்கு பெரிய நிவாரணம். உங்களுடைய அரசின் தோல்வியை பட்டியலிட விரும்புகின்றேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை நிறுத்தினீர்கள், கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் நீங்கள் இதுவரையில் பொதுமக்கள் நலம்பெறும் வகையில் ஆயில் விற்பனை விலையை குறைக்கவில்லை. வங்கிகளுக்கு கடன் கொடுக்கவேண்டிய விஜய் மல்லையாவை பத்திரமாக நாட்டை விட்டு வெளியே அனுமதித்துவிட்டீர்கள் என்று உம்மன் சாண்டி முகநூலில்; கடுமையாக விமர்சித்து உள்ளார்.

 

மேலும் கடந்த 4 வருடங்களில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது உங்களுக்கு தெரியாது, இதில் 45 ஆயிரம் கடந்த 2 வருடங்களில் மூடப்பட்டதே?

என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிஉள்ளார். ஏழைகளுக்கு எதிரான திட்டங்களையே பிரதமர் மோடி குஜராத் மற்றும் பிற பகுதிகளில் அமல்படுத்தி உள்ளார். உங்களுடைய பொய்யான வாக்குறுதிகளை மக்கள் பார்த்துவிட்டனர்,

நீங்கள் கேரளாவையில் கால்பதிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்,

என்று உம்மன் சாண்டி கூறிஉள்ளார்.

பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.