Show all

நேதாஜி தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அந்த 64 ஆவணங்களும் கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவற்றை பார்வையிட்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியவை பின்வருமாறு:-

70 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மமாக நீடித்து வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய கோப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும். விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் இன்று வெளியிடப்பட்டுள்ள 64 ஆவணங்களில் காணப்படும் கடிதங்களை வைத்து பார்க்கும் போது அவர் 1945-க்கு பிறகும் கூட உயிர் வாழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். அந்த கோப்புகளை நான் முழுமையாக பார்வையிடவில்லை. ஒரு சில பகுதிகளை மட்டுமே பார்த்தேன். அவர் 1945-க்கு பிறகும் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படும் கடிதங்களை நான் பார்த்தேன். அவருடைய குடும்பம் உளவு பார்க்கப்பட்ட  விபரத்தையும் அதில் காண முடிகிறது. நேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை நம்மால் இன்னும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இது துரதிருஷ்டவசமானது. ஆனால், எவ்வளவு  நாள்தான் இதை ரகசியமாக வைத்திருக்க முடியும்?. நேதாஜி மாயமான மர்மம் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்டு மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் நிச்சயமாக உண்மை வெளியே வரும். உண்மையை அழுத்தி வைத்திருக்க முடியாது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.