Show all

மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பியூ நிறுவனம் சார்பில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 2452 இந்தியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மோடியின் கொள்கைகள் மற்றும் ஆட்சிக்கு அப்பாற்பட்டு, அவருக்கு 87 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் இவர்களில் காங்கிரசில் இருந்தவர்களும் அடங்குவர்.

2015ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் நடைபெற்ற மதகலவரங்கள், 2014ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற மதக்கலவரங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் காங்கிரசை விட மோடி மற்றும் பாஜக-க்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். க்ளீன் இந்தியா திட்டத்திற்கு 66 சதவீதம், வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு 62 சதவீதம், ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்கு 61 சதவீதம், பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு 61 சதவீதம் பேறும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் நகர்புறங்களில் காங்கிரஸ் 52 சதவீதம், பாஜக 83 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் பாஜக 89 சதவீதம், காங்கிரஸ் 64 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் மோடிக்கு 89 சதவீதம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு 66 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நகரங்களில் மோடிக்கு 84 சதவீதம் , ராகுலுக்கு 53 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.