Show all

வேலூரில் செய்தமாதிரி சோதனையெல்லாம் இந்தியத் தலைமை அமைச்சருக்கு கிடையாதாமே! மோடியைச் சோதித்தவர் நீக்கம்

சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உள்ளவர்களுக்கு, சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். அதனால்  மோடியின் உலங்கு வானூர்தியில் சோதனை நடத்தியதால் மொஹ்சின் என்பவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத்  தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அப்படியா? இவ்வளவு சலுகைகளா இந்தியத் தலைமைஅமைச்சருக்கு என்று வாய் பிளக்கிறார்கள் அப்பாவி பொதுமக்கள்.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி சென்ற உலங்கு வானூர்தியைச் சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி, தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். மோடியின் புகாரின் பேரில், விதிமுறைப்படி செயல்படாததாக இந்த அதிகாரியை தற்காலிக நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாம்.
ஒடிசா சென்ற மோடியின் உலங்கு வானூர்தியைத், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்த நிலையிலும், இச்சோதனை நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தில் மோடி புகார் அளித்தார். விசாரணைக்கு பின், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படியான செயல்பாடு இது இல்லையாம். அதனால் சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சினை, தேர்தல் ஆணையம் தற்காலிக நீக்கம் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உள்ளவர்களுக்கு, சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மோடியின் உலங்கு வானூர்தியில் சோதனை நடத்தியதால் மொஹ்சின் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,126.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.