Show all

ராமநாதபுரம் கடலாடியில் புதிய அனல்மின் நிலையம்.

ராமநாதபுரம் கடலாடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

விதிஎண் 110ன் கீழ்அறிக்கை ஒன்றை வாசித்த அவர் 24 ஆயிரம் கோடி நிதியில் அமைக்கப்படும் என்றார். இதன்மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருதாகக் குறிப்பிட்ட அவர், கைத்தறி நெசவாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க கைத்தறித்துறை அமைச்சர் தலைமையில் நெசவாளர் குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழகத்தில் உள்ள சிறைகளுக்கு 30 அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க 2 கோடியே 34 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த ஜெயலலிதா, சிறைத்துறை ஊழியர்களுக்கு 100 குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் கூறினார்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.