Show all

ராஜபக்சே போட்ட ஆட்டம்! அதிகாரப்பூர்வமாக தலைமை அமைச்சராக அங்கிகரிக்க படாத நிலையிலேயே; அம்பலப் படுத்தியது அறங்கூற்று மன்றம்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மஹிந்தா ராஜபக்சே நடத்திய சில நாள் ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றுள்ளது இலங்கை அறங்கூற்றுமன்றம்

அவரது நியமனங்கள் சட்டப்படியாக செல்லாது என்று கூறியுள்ளது. மேலும் அறங்கூற்றுமன்றம் சரிசெய்ய முடியத இழப்பை அரசியலமைப்பில் ராஜபக்சே செய்து விட்டதாகக் கூறியுள்ளது, 

ராஜபக்சே சீன நிறுவனங்களுடன் பல மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார். அரசியல் சூழல் மோசமாக உள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வாக்கெடுப்பில் ரணில் வென்றுள்ளதால், சிறிசேனா நியமித்த ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடி ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டு வந்துள்ள அரசு இதனை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  வெளிநாடுகள் ராஜபக்சே அரசை ஏற்கவேயில்லை. அதேசமயம் ரணிலின் கட்சி ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறிவருகிறது.

இலங்கை துறைமுக அதிகாரி ஒருவர் 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தங்கள் ராஜபக்சே அரசால் போடப்பட்டதாக தெரிவித்துள்ளார். 32 மில்லியன் டாலர் செலவில் ஆழத்தை அதிகரிப்பதற்காக சீன துறைமுக பொறியியல் நிறுவனத்திடமும், இதே திட்டத்துக்காக 25.7 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 3 க்ரேன்களை வாங்க ஷாங்காய் ஹென்ஹூவா ஹெவி நிறுவனத்திடமும் ஒப்பந்தம்  போடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

இந்த ஒப்பந்தங்கள் நீடிக்குமா என்று ரணிலின் செய்தி தொடர்பாளர் ரஜிதா செனர்தனேவிடம் கேட்டதற்கு, நாங்கள் கட்டாயம் மறு பரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ளார்.

இந்தியாதான் இலங்கையில் துறைமுக வர்த்தகத்தில் 80 விழுக்காடு பங்களிப்பை அளிக்கிறது. சீனாவின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.