Show all

நாடு முழுவதும் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களில் 207 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடி

நடுவண் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களிடையே தேச பக்தியை வளர்க்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களில் 207 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது என்று நடுவண் அரசு தீர்மானித்து உள்ளது. அதன்படி, முதல் தேசிய கொடி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு நடுவண் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட இருக்கிறது.

 

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நடந்த 46 நடுவண் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக டெல்லியில் நடுவண் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் பிரச்சினை எழுந்ததைத் தொடர்ந்து மாணவர் தலைவர் கன்னையா குமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், கடந்த மாதம் ஐதராபாத்தில் நடுவண் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எனவே மாணவர்கள், இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் மேற்கண்ட முடிவை நடுவண் அரசு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.