Show all

இனி கிராம மக்களின் செல்பேசிகள் அடிக்கடி செத்துப் போகும்! உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் வாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முயற்சி

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் பெரும்பாலோர் இதுவரை செல்பேசியை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பேசும் தேவையென்றால், அவ்வப்போது 10 ரூபாய் கட்டணம் ஏற்றம் செய்து, பயன்படுத்தி வருகின்றனர். பெரியதாக அவர்களிடம் இருந்து வருவாய் ஈட்ட முடியவில்லை தொலைத் தொடர்பு நிறுவனங்களால். எனவே அவர்களிடம் இருந்து எப்படி வருவாயினை ஈட்டுவது என்று தற்போது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதன் படி டெலிகாம் நிறுவனங்கள் உள்வரும் அழைப்புகளுக்குக் கட்டணத்தினை வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

வோடாபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட சில முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான கட்டணத்  திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 35 ரூபாய்க்கு கட்டண ஏற்றம் செய்தால் 28 நாட்களுக்கு உள்வரும் அழைப்புகளை பெற முடியும் மற்றும் 26 ரூபாய்க்கு பேசும் நேரமும்; மற்றும் 100 எம்பி இணையதளத் தரவும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது போன்று ஏர்டெல் நிறுவனம் 35 ரூபாய், 65 ரூபாய் மற்றும் 95 ரூபாய் என மூன்று கட்டண ஏற்றத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டங்களை முழுமையாக விரைவில் அமலுக்குக் கொண்டு வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இனி கிராம மக்களின் செல்பேசிகள் அடிக்கடி செத்துப் போகும்! அவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும். கிராம மக்களிடம் இனி தொலைத்தொடர்புச் சேவை ஊசலாட்டமாகவேயிருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,980.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.