Show all

அதிர்ச்சியில் தமிழக மக்கள்- கோரிக்கை மடல் எழுதியுள்ளார் தமிழக முதல்வர்! ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி தேவையில்லை- அறிவிக்கை

ஹைட்ரோ கார்பன்கள் நிலத்தின் ஆழப்பகுதிகளில் இருக்கிறதா என்று தேடும் இயற்கையை சிதைக்கும் முயற்சி ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய தேவையை நீக்கும் வகையில், அவற்றை ஏ பிரிவிலிருந்து பி2 பிரிவுக்கு மாற்றி ஒன்றியநடுவண் பாஜக அரசு அண்மையில் உத்தரவிட்டது தமிழக வேளாண்பெருமக்கள், அறிஞர்கள், சான்றோர் பெருமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அறிஞர்கள், சான்றோர் பெருமக்கள் கண்டித்;து வரும்- ஹைட்ரோ கார்பன்கள் நிலத்தின் ஆழப்பகுதிகளில் இருக்கிறதா என்று தேடும் இயற்கையை சிதைக்கும் முயற்சி ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய தேவையை நீக்கும் வகையில், அவற்றை ஏ பிரிவிலிருந்து பி2 பிரிவுக்கு மாற்றி ஒன்றியநடுவண் பாஜக அரசு அண்மையில் உத்தரவிட்டது தமிழக வேளாண்பெருமக்கள், அறிஞர்கள், சான்றோர் பெருமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.  ஒன்றியநடுவண் அரசின் இந்த வகைமாற்றத்தால், ஆய்வுக்கென தோண்டும் மிக ஆழக் கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையோ, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமோ நடத்த வேண்டிய தேவை இல்லை. மாநில அரசின் அனுமதியே போதுமானது.

தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அதிகம் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பாக தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மடல் எழுதியுள்ளார்.

அந்தக் மடலில், இந்த விதிமுறை மாற்றத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், இது போன்ற ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு வடிநிலப் பகுதியில் கடுமையான எதிர்ப்பு இருப்பது குறித்து 2017 பிப்ரவரி 27ஆம் தேதி எழுதிய கடிதத்திலேயே கூறியிருந்தேன். ஹைட்ரோ கார்பன் ஆய்வு செய்வதற்கோ, எடுப்பதற்கோ தமிழ்நாட்டில் வேளாண் பெருமக்களிடமும் செயல்பாட்டாளர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இம்மாதிரியான திட்டங்கள் பெரும்பாலும் காவிரி வடிகால் மாவட்டங்களிலேயே அமைகின்றன. இவை, சூழல் அடிப்படையில் எளிதில் பாதிப்படையக்கூடிய பகுதிகள். மாநிலத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் வளமான பகுதிகள் இவை. அதனால், இந்தத் திட்டங்களுக்கு உணர்வு அடிப்படையாக, தீவிர எதிர்ப்பு எழுகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆகவே இம்மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்தும்போது மக்களையும் சம்பந்தப்பட்டவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களது ஒத்துழைப்பைப் பெற வேண்டியது கட்டாயமாகிறது. ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை இதற்கு எதிராக இருக்கிறது. மேலும் ஜனவரி 16ஆம் தேதியிட்ட இந்த அறிவிக்கையை வெளியிடும் முன்பாக, வரைவு அறிக்கை ஏதும் சுற்றுக்கு விடவில்லை. சம்பந்தப்பட்டவர்களும் மாநில அரசும் இது தொடர்பாக தங்கள் கருத்தை அளிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை" என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதலமைச்சர் பழனிச்சாமி.

ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளுக்கான விதிகளை மாற்றம் செய்யும்போது மாநில அரசைக் கலந்தாலோசிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆய்வு விதிகளை முன்பிருந்தபடியே நீடிக்கச் செய்ய வேண்டுமென ஒன்றியநடுவண் தலைமைஅமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.