Show all

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என மோடி பாராட்டு.

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என பிரதமர் மோடி பாராட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் மனதில் உள்ளதை பேசுகிறேன் நிகழ்ச்சியின் வழியாக நாட்டு மக்களுக்கு நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர் உறுப்புதானம் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

நான் உடல் உறுப்பு தானம் பற்றி பேச வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த பெண்கள் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நமது நாட்டில் உடல் உறுப்புதானம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் எண்ணற்ற விபத்துக்கள் நடக்கின்றன. உயிரையும், அங்கங்களையும் காப்பதற்கு உறுப்புகள் தானம் தொடர்ந்து தேவைப்படுகிறது.

தேவை அதிகம், கிடைப்பதோ குறைவு

ஒவ்வொரு ஆண்டும், 2½ லட்சம் பேருக்கு மாற்று இருதயம், கல்லீரல், சிறுநீரகம் தேவையாக உள்ளது. ஆனால் 5 ஆயிரம் நன்கொடையாளர்கள்தான் கிடைக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் கண்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 25 ஆயிரம் கொடையாளிகள்தான் கிடைக்கின்றனர்.

சாலை விபத்துக்களின்போது, உடலுறுப்புகளைத் தானம் செய்யலாம். இதில் சட்ட ரீதியான சில குழப்பங்கள் இருக்கின்றன. மாநிலங்களுக்கு இதில் வழிகாட்டும் முயற்சியில் இறங்கி உள்ளோம். காகித அடிப்படையிலான வேலைகளில் சில மாநிலங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

உடல் உறுப்புகள் தானத்தை பொறுத்தமட்டில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

உடல் உறுப்புகள் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தேசிய உடல் உறுப்பு, திசு மாற்று அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்துக்காக 24 மணி நேரமும் இயங்குகிற இலவச தொலைபேசி சேவை வசதியும் உள்ளது.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து மோடி வலியுறுத்தியபோது,

சமீபத்தில் டெல்லியில் அரசு மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஏழை வியாபாரி ஒருவருக்கு, சிறப்பு ஏற்பாடாக உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து கல்லீரல் எடுத்துச்சென்று பொருத்தியதை நினைவுகூர்ந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.