Show all

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மே-16இல் சட்டமன்றத் தேர்தல்

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மே-16இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 

மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

5 மாநிலங்களில் மத்திய பாதுகாப்பு படையின் உதவியுடன் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கபட்டு உள்ளது.

 

தமிழகம்234 தொகுதிகள்,

அசாம் மாநிலத்தில்126 தொகுதிகள்,

மேற்கு வங்காளம்294 தொகுதிகள்,

கேரளா140 தொகுதிகள்,

புதுச்சேரி -30 தொகுதிகள் ஆகும்.

கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகாத் தேர்தல் நடைபெறுகிறது.

வேட்பு மனு தொடக்க நாள் - ஏப்ரல் 22.

வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் - ஏப்ரல் 29.

வேட்பு மனு பரிசீலனை நாள் - ஏப்ரல் 30.

வேட்பு மனுவை திரும்பபெறும் நாள் - மே 2.

தேர்தல் நடைபெறும் தேதி - மே 16.

 

5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் மே-19 எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்து உள்ளார்.

 

5 மாநிலங்களிலும் தரைத்தளங்களிலேயே வாக்குச்சாவடியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  5 மாநிலங்களிலும் 17 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை

தமிழகம் 5.8 கோடி. அசாமில்1.98 கோடி. கேரளா 2.6 கோடி. மேற்கு வங்காளம் 6.55 கோடி, புதுச்சேரி 9 லட்சத்து 10 ஆயிரம்.

தமிழகத்தில் 65616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அசாமில் 25 ஆயிரம், கேரளாவில் 21 ஆயிரம், மேற்கு வங்காளத்தில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. புதுச்சேரியில் 913 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

 

வாக்காளர் அடையாளச் சீட்டு விநியோகத்தை மத்திய தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ‘அனைத்து மகளிர் வாக்குச்சாவடி’ அமைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும். தேர்தலின்போது வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

 

பணப் பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் கருவி வசதிகளுடன் பறக்கும் படையானது அமைக்கப்படும்.

நோட்டாவுக்கு தனி சின்னம்:

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட நோட்டோவிற்கு என்று வாக்குப்பதிவு இயந்திரத்திரத்தில் தனி சின்னம் வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்து உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.