Show all

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடந்து முதலிடம்

வாஷிங்டன்,  உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடந்து முதலிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் தன்வசப்படுத்தியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பனி  36-வது இடம் வகிக்கிறார்.

 

2016-ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை அமெரிக்காவின் பிரபல  போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810 பேராக குறைந்துள்ளது.

 

இப்பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சுமார் 75 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 மில்லியன் டாலர் குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து பில்கேட்ஸ் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

 

பில்கேட்ஸை தொடர்ந்து  2-வது மற்றும் 3-வது இடங்கள் முறையே அமென்சியோ ஒர்வேகாவும், வாரன் பபெட்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு 16-வது இடம் வகித்த முகநூல் நிறுவனர் மார்க்கர் ஜூகர்பெர்க்  கிடுகிடுவென இந்த ஆண்டு 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த 84 பில்லியனர்களில், முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். மொத்த பட்டியலில் 36வது இடம் பிடித்துள்ள இவரின் சொத்து மதிப்பு 62.2 பில்லியன் டாலர்களாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.