Show all

ஆயாவையே மாற்ற முடியாதவர்களா ஆட்சி முறையை மாற்றுவார்கள்.

ஆயாவையே மாற்ற முடியாதவர்களா ஆட்சி முறையை மாற்றுவார்கள் இணையத்தள கிண்டல்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான விளம்பர கோதாவில் குதித்துள்ளன.

‘வானத்தில பறக்குறவங்களுக்கு, நம்மளுடைய பிரச்சினை எப்படிங்க தெரியும்? மக்களப் பத்தியே கவலப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா...’ இந்த டயலாக்கை உணர்ச்சி பொங்க கையை ஆட்டியபடியே, ஒரு வயதான மூதாட்டி சொல்வது போன்ற திமுக விளம்பரங்களை அடிக்கடி நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்க கூடும்.

ஆனால், இதே பெண்மணிதான், அதிமுக விளம்பரத்தில் ஆட்சியை புகழ்ந்து நடித்துள்ளார் என்பதுதான் இதில் சிறப்பு. கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதானம் திட்டத்தால் பலன் அடைந்த பெண்மணி போல நடித்து அதிமுக அரசை வாழ்த்தும் விளம்பரம் ஒன்றிலும் இதே பெண்மணிதான் நடித்துள்ளார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.