Show all

மதுபானம் குடிப்பதற்கான வயது வரம்பை 21ஆக தளர்த்தலாமா. கபில்சர்மா:

மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என டெல்லி ஆம் ஆத்மி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் சர்மா பேசியுள்ளார்.  டெல்லியில் ரெஸ்டாரெண்ட் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கபில் சர்மா பேசுகையில்,

மது குடிப்பதற்கான வயது வரம்பை 25 லிருந்து 21 ஆக குறைப்பதற்கு ஆதரவு அளிக்கிறேன். தற்போது உள்ள மது கொள்கை நடைமுறை சாத்தியமற்றது. நுகர்வோரையும், பார் உரிமையாளர்களையும் பாதிக்கக் கூடியது. டெல்லியில் மது குடிப்பதற்கான வயது வரம்பு 25 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் கூட மது குடிப்பதற்கான வயது வரம்பு 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் அவரே நிருபர்களிடம் கூறுகையில், இந்திய பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த விவகாரம் குறித்து கோரிக்கை விடுத்தால் இதை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன். தற்போது உள்ள மதுபான கொள்கையை நான் எதிர்க்கிறேன்.

25 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மது பானம் கொடுத்ததாக கூறி அடிக்கடி போலீஸ்காரர்களால் தாங்கள் தொல்லையை சந்திப்பதாக ஏராளமான மது பான பார் உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர் என்றார். கடந்த ஷீலா தீட்சித் ஆட்சி காலத்தின் போது மதுபானம் குடிப்பதற்கான வயது வரம்பை 21ஆக தளர்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஒரு தருணத்தில் 18 ஆக கூட குறைத்து விடலாம் என்றும் யோசிக்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக முந்தைய காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது. தற்போது கபில் சர்மா பேச்சு மூலமாக இந்த விவகாரம் மீண்டும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                             


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.