Show all

இந்தியா 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது: சீனாவின், அரசு ஊடகம் விமர்சனம்

இந்தியா இன்னும் 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது என்று சீனாவின், அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் விமர்சனம் செய்துள்ளது.

 

கடந்த மாதம் இந்தியா அணுசக்தி வினியோக குழுவில் இணைய மேற்கொண்ட முயற்சிகளை சீனா தடுத்துவிட்டது. இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. சீனாதான் தங்கள் முயற்சியை தடுத்துவிட்டதாக இந்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. விதிமுறைகளின் அடிப்படையில் தான் அணுசக்தி வினியோக குழுவில் இந்தியா சேர்க்கப்படவில்லை என்று சீனா கூறிவருகிறது.

 

இந்நிலையில் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் கட்டுரையில் இந்தியா இன்னும் 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளது.

 

மேலும் அந்த கட்டுரையில்,

அணுசக்தி வினியோக குழுவில் இடம்பெற முடியாமல் போனதை இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது போல் தெரிகிறது.

 

இந்தியா இன்னும் 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது. இந்த விஷயத்தில் புறநிலை மதிப்பீடுகள் அவசியம். சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதை விடுத்து, சர்வதேச நாடுகளின் நம்பிக்கையைப் பெற இந்தியா முயற்சிக்க வேண்டும். சீனா இந்தியாவை அரசியல் ரீதியாக மட்டுமே பார்க்கும் காலம் போய்விட்டது. நாங்கள் இந்தியாவை பொருளாதார ரீதியாக அணுகுகிறோம்.

என்று கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.