Show all

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது: நடுவண் சட்டத்துறை அமைச்சர்.

நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது என்று நடுவண் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது.

இதற்குப் பதிலாக,

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் மூலம் நீதிபதிகளை நியமிக்க நடுவண்அரசு முடிவு செய்தது. இது தொடர்பான தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடுவண்அரசு நிறைவேற்றியது.

ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான 99-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில்,

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்,

அதற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கும் சட்ட திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக

உச்சநீதிமன்றம் பதிவு பெற்ற வக்கீல்கள் சங்கம் மற்றும் இந்திய வக்கீல்கள் சங்கம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும்,

கொலீஜியம் முறையே தொடந்து அமலில் இருக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.  

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆச்சர்யம் அளிப்பதாக நடுவண்சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நீதிபதிகள் நியமனஆணையம் பாராளுமன்றத்தின் முழு ஆதரவு பெற்றது.  

தீர்ப்பை முழுமையாக படித்த பின் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தீர்ப்பு தொடர்பாக பிரதமர், அமைச்சர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.