Show all

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடித்த புதிய பாக்டீரியாவுக்கு அப்துல்கலாம் பெயர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடித்த புதிய பாக்டீரியாவுக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன.

பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், (100 பில்லியன் டாலர்) சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து அந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் புதிய வகையான பாக்டீரியா சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கு- மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பாக்டீரியாவைக் கண்டுபிடித்த குழுவிற்கு இந்தியாவை சேர்ந்த நாசா விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.