Show all

நாட்டுப்பண்ணில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

நாட்டுப்பண்ணில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி   பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தியாவின் நாட்டுப்பண்ணில் ஜன கண மன இருக்க வேண்டுமா அல்லது வந்தே மாதரம் இருக்கவேண்டுமா என்பது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, வாக்கெடுப்பு நடத்தாமல் ஜன கண மன பாடலை நாட்டுப்பண்ணாக அறிவித்தார். அதேசயம் வருங்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தி தேவையான மாற்றங்களைச் செய்துக்கொள்ளலாம் என ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.

மேலும் ஜன கண மன பாடல் பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பதால் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது அவசியம். எனவே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ கீதத்தில் சில சொற்களை பயன்படுத்தினார். அந்தச் சொற்களைத் தேசிய கீதத்தில் இணைத்து மாற்றம் செய்யவேண்டும். 95 விழுக்காட்டுப் பாடலை அப்படியே வைத்துக்கொண்டு மீதமுள்ள 5 விழுக்காட்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரைச் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.