Show all

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை சேலம் மத்திய சிறையிலடைப்பு

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துள்ளார். அதனை வகுப்பாசிரியை விஜயலட்சுமி என்பவர், 2ஆம் வகுப்பு மாணவர் சசிதரனை, அவர் கையால் மலத்தை அள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்குச் சென்ற மாணவர் சசிதரன், தனது பெற்றோரிடம் இதைத் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 150 பேர் வௌ;ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், மாலதி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அதிகாரிகள் இரண்டு நாட்களில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து மாணவர் சசிதரனின் தந்தை வீராசாமி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை விஜயலட்சுமியை நாமக்கல் காவல் துறையினர் கைதுசெய்து, சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.